Published : 06 Oct 2024 07:51 AM
Last Updated : 06 Oct 2024 07:51 AM
புதுடெல்லி: அலகாபாத்தின் கும்பமேளாவுக்காக அகாடா பரிஷத் (துறவிகளின் பிரிவுகள்), அகில இந்திய துறவிகள் சம்மேளனம் கூடி ஆலோசனை செய்து வருகிறது. இதில், மூத்த துறவிகளுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மூக்கூடலில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கும்பமேளா விழா நடைபெறுவது வழக்கம். வரும் ஜனவரி 13-ம் தேதி (தை மாதத்தில்) இது தொடங்குகிறது. உ.பி. அரசின் செலவில் நாடு முழுவதிலும் உள்ள துறவிகளும், மடாதிபதிகளும் இதை முன்னின்று நடத்துகின்றனர்.
இதுதொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று அலகாபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “நாட்டில் ஆன்மீக வழியில் அமைதியை ஏற்படுத்தும் மூத்த துறவிகளுக்கு மத்திய அரசு பாரத ரத்னாவிருதுகளை அளித்து கவுரவிக்க வேண்டும். அனைத்து அகாடாக்களின் நிர்வாகிகளுக்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உ.பி. முதல்வரும் துறவியுமான யோகி ஆதித்யநாத்திடமும் சிலகோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதில், கும்பமேளாவுக்கு வரும் முக்கியத் துறவிகளுக்கு உ.பி. அரசின் அடையாள அட்டைவழங்க வேண்டும். கும்பமேளாவில் துறவிகளின் செலவுகளுக்காக ரூ.5 கோடியை மாநில அரசு அளிக்க வேண்டும். அகாடா பரிஷத்அடையாளம் கண்டு அறிவித்த போலி துறவிகளுக்கு கும்பமேளாவில் நுழைய தடை விதிக்க வேண்டும். கும்பமேளா பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லாமை, தூய்மை மற்றும் பசுமையை கடைபிடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உ.பி. அரசு மேற்கொள்ளாவிட்டால், அகாடா பரிஷத்தினர்கும்பமேளாவை புறக்கணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்: மேலும், ஏதாவது பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகஅதிகாரிகளை அணுகும் துறவிகளை மதிப்பதில்லை. அவர்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, துறவிகளின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நேரம் ஒதுக்கி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT