Published : 05 Oct 2024 03:16 PM
Last Updated : 05 Oct 2024 03:16 PM

மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி... - மேற்கு வங்க சிறைக் கைதிகளுக்கான துர்கா பூஜை மெனு

பிரதிநிதித்துவப்படம்

கொல்கத்தா: மேற்கு வங்க சிறைகளில் உள்ள கைதிகள் தாங்கள் துர்கா பூஜைக் கொண்டாட்டத்தில் இருந்து விலகி இருக்கிறோம் என உணரக் கூடாது என்பதற்காக கைதிகளுக்கு துர்கா பூஜையின்போது மட்டன் பிரியாணி, பாசந்தி புலாவ் மற்றும் பல மேற்கு வங்க உணவுகளை வழங்க முடிவெடுத்து இருப்பதாக சிறைத் துறை அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மேற்கு வங்க சீர்திருத்த இல்லங்களுக்கான அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாற்றியமைக்கப்பட்ட மெனு, துர்கா பூஜையின் ஆரம்பமான சஸ்தி (அக்.9) முதல் முடிவான தசமி (அக்.12) வரை அமலில் இருக்கும். இது குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போதும் சிறந்த உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சிறைக் கைதிகளிடமிருந்து எங்களுக்கு வரும். இந்தாண்டு புதிய மெனுவுக்கான உத்தரவை நாங்கள் பெற்றுள்ளோம். அது கைதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது அவர்களை சீர்திருத்துவதற்கான நேர்மறையான நகர்வு என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இந்தப் புதிய மெனுக்களில் மீன் தலையுடன் கூடிய மலாபார் கீரை, மீன் தலையுடன் கூடிய பருப்பு, பூரி மற்றும் பெங்காலி சென்னா தால், பெங்காலி இனிப்பு வகை, சிக்கன் குழம்பு, சுரைக்காய் மற்றும் உருளைக்கிழங்குடன் கூடிய இறால், ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் ரைத்தா மற்றும் பாசந்தி புலாவ் போன்றவை அடங்கும். என்றாலும், சிறைக் கைதிகளின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது. சிறைக் கைதிகள் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

நாங்கள் கைதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறோம். அவர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த விரும்புகிறோம். பல வங்காளிகளுக்கும் பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் வசித்து வரும் பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் துர்கா பூஜை மற்றும் பிற பண்டிகைகள மீன் மற்றும் இறைச்சி இல்லாமல் முடிவடையாது. எனவே, அவர்கள் வங்காளிகளாக மகிழ்ச்சியடைவதற்கு அவர்களின் உணவில் நாங்கள் மாற்றம் கொண்டு வர விரும்பினோம்” என்றார்.

சந்தீப் கோஷ் முதல் பர்தா சாட்டர்ஜி வரை.. - கொல்கத்தாவில் இருக்கும் சிறைகளில் ஒன்றான பிரஷிடன்சி சிறைக் கூடத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில அமைச்சர் பர்தா சாட்டர்ஜி, பொது விநியோக திட்ட முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதி பிரியா மாலிக் மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x