Last Updated : 29 Jun, 2018 08:17 PM

 

Published : 29 Jun 2018 08:17 PM
Last Updated : 29 Jun 2018 08:17 PM

ப.சிதம்பரத்தின் தாராளவாதத் திட்டம் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

சுவிஸ் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையினால் அடுத்த ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளின் விவரங்கள் கிடைக்கும் என்று கூறிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாராளவாதக் கொள்கையினால் இந்தியர்கள் சுவிஸ் வங்கி நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்றார்.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் 50% அதிகரித்ததில் 40% ப.சிதம்பரம் அறிமுகம் செய்த எல்.ஆர்.எஸ் (liberalised remittance scheme)திட்டத்தினால் இருக்கலாம். இந்தத் திட்டத்தின் படி தனிநபர் ஆண்டுக்கு 2,50,000 டாலர்கள் வரை சுவிஸ் வங்கிகளுக்கு அனுப்பலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “எங்களுக்கு அனைத்துத் தகவல்களும் கிடைக்கும், முறைகேடு செய்பவர்கள் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை பாயும்” என்று எச்சரித்தார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, கருப்புப் பண உற்பத்தி எந்திரங்களில் ஒன்றான போலி நிறுவனங்கள் முதலில் பெருமளவில் ஒழிக்கப்பட்டது.

ஜூலை 1ம் தேதிதான் பிரதமர் மோடி, ‘சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட்கள் 45% குறைந்துள்ளது’ என்றார். ஆனால் சுவிஸ் வங்கியின் ஆண்டறிக்கை விவரத்தில் 2017-ல் இந்தியர்களின் டெபாசிட் 50% அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருந்தது.

பியூஷ் கோயல் மேலும் இது பற்றி கேட்ட போது கூறியதாவது, ‘நீங்கள் கூறும் தகவல் எங்களுக்கும் வரும், அங்கு நடந்த டெபாசிட்கள் அனைத்தும் கறுப்புப் பணம், சட்டவிரோத நடவடிக்கை என்று எப்படி நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x