Published : 03 Oct 2024 06:26 AM
Last Updated : 03 Oct 2024 06:26 AM
திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு, மீன்எண்ணை போன்றவை கலப்படப்படம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்தார்.
இதனை தொடர்ந்து, ஏழுமலையானுக்கு களங்கம் வந்துவிட்டதால் பிராயச்சித்த விரதத்தை மேற்கொள்வேன் என துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்ததோடு, கடந்த மாதம் விரதத்தையும் தொடங்கினார். தொடர்ந்து 11 நாட்கள் வரை விரதம் இருந்த அவர், நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தார். அதன் பின்னர் அவர் அலிபிரி பாதையில் நடந்தே திருமலைக்கு சென்றடைந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் நேற்று காலை தனது 2 மகள்களான ஆத்யா, ஃபலீனா அஞ்சனி ஆகியோருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அப்போது தன்னுடன் கொண்டு வந்த வாராஹி நம்பிக்கை பத்திர புத்தகத்தை ஏழுமலையானின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று திருப்பதியில் நடைபெற உள்ள வாராஹி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் இந்த புத்தகம் என்ன என்பது குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிக்க உள்ளார்.
மகளிடம் கையெழுத்து: முன்னதாக, துணை முதல்வர்பவன் கல்யாண் தனது இரண்டாவது மகளான ஃபலீனா அஞ்சனியை, திருமலை திருப்பதி தேவஸ்தான பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட வைத்தார். அவர் மைனர் என்பதால், துணை முதல்வர் பவன் கல்யாணும் அந்த பதிவேட்டில் கையெழுத்திட்டார். பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னேவா, ரஷ்யா நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார்.
ஆதலால், கிறிஸ்தவத்தை தனதுமதமாக ஏற்றிருக்கும் தனது இளைய மகள் ஃபலீனா அஞ்சனியை, திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வைத்தார் பவன் கல்யாண். ஆனால், மூத்த மகளான ஆத்யா, இந்து மதத்தை தழுவியவர் என்பதால் அவர் கையெழுத்திட தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT