Published : 02 Oct 2024 05:28 AM
Last Updated : 02 Oct 2024 05:28 AM
அமராவதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க ஆந்திர அரசு ஒரு சிறப்பு விசாரணை குழுவினை (எஸ்ஐடி) குண்டூர் டிஐஜி சர்வ ஸ்ரேஷ்ட திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதிக்கு வந்து விசாரணையை தொடங் கினர். இதில் பல விஷயங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில்கலப்பட நெய் வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம், கடவுள்களை அரசியலுக்கு இழுக்க வேண்டாம்என ஆந்திர அரசுக்கு கண்டனம்தெரிவித்தது. மேலும், எஸ்ஐடிதனது விசாரணையை, நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கும் படியும் உத்தர விட்டது.
இதையடுத்து அமராவதியில் ஆந்திர டிஜிபி திருமல ராவ் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந் துள்ளனர். ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழு, தனது விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக்குழு ஏற்கெனவே கடந்த3 நாட்களாக தங்களது விசாரணையை தீவிரமாக நடத்தி பல விஷயங்களை அறிந்துள்ளனர். இந்த இடைப்பட்ட நாட்களில் இவர்கள் மேலும் பல விஷயங்களை அறியலாம். இவ்வாறு டிஜிபி திருமல ராவ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருமலையில் இருந்து சிறப்பு விசாரணை குழுவும் கிளம்பிச் சென்றது.
திருமலையில் துணை முதல்வர்: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கடந்த ஜெகன் ஆட்சியில் கலப்படம் செய்யப்பட்டதற்காக, பெருமாளிடம் மன்னிப்பு கோரும் விதத்தில் 11 நாட்கள் ஏழுமலையானுக்கு விரதம் இருக்க போவதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்திருந்தார். குண்டூர் மாவட்டத்தில்உள்ள தசாவதாரம் கோயிலில்மாலை போட்டு விரதத்தை கடைபிடிக்க தொடங்கினார்.
விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலுக்கும் இவர் படியேறிசென்று வந்தார். இன்று 2-ம் தேதியுடன் இவரது விரதம் முடிவதால், நேற்று இவர் திருப்பதிக்கு வந்தார். இவருக்கு ரசிகர்கள், தொண்டர்கள் உட்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் நேற்று தனது வேண்டுதலின் படி சிவப்பு ஆடை அணிந்துபடியேறி திருமலைக்கு சென்றார்.இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசித்து விட்டு தனதுவிரதத்தை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து திருப்பதியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜனசேனா கட்சியினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT