Published : 08 Jun 2018 08:15 AM
Last Updated : 08 Jun 2018 08:15 AM
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று அமராவதியில் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்தார். அப்போது சிங்கப்பூர் - ஆந்திரா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று அமராவதிக்கு வந்தது. பின்னர் அவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர மாநில தலைநகரம் அமராவதியில் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான கட்டுமானப் பணிகள் குறித்தும், ஆந்திர சுற்றுலா துறையில் சிங்கப்பூர் அரசு பங்கேற்பது குறித்தும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக அமராவதி கட்டுமான பணியை விரைவுபடுத்தி சர்வதேச தொழில் நுட்பத்தை உபயோகித்து சிறப்பாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிங்கப்பூரின் ஆதரவு எப்போதும் இருக்கும். அமராவதி கூட்டமைப்பு கட்டிடம் விஜயவாடாவில் அமைக்கப்பட உள்ளது. ஒரு உலக தரம் வாய்ந்த நகரமாக அமராவதி உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் ஈஸ்வரன் கூறினார். பின்னர் ஈஸ்வரன் தலைமையில் சிங்கப்பூர் குழு அமராவதி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT