Published : 11 Jun 2018 08:43 AM
Last Updated : 11 Jun 2018 08:43 AM

ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை தூளியில் தூக்கி சென்ற அவலம்

ஆம்புலன்ஸ் வராததால் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணியை கிராம மக்கள் தூளியில் 3 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தவர் அதிகம் வசிக்கும் கோட்டப்பரட்லா மண்டலம், அனுக்கு என்ற கிராமத்தில் நேற்று ஒரு இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், கிராமத்தில் சாலை வசதி சரிவர இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. சில மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

பிரசவ வேதனையும் அப்பெண்ணுக்கு அதிகரித்தது. இதனால் கிராம மக்கள் மூங்கிலில் தூளியை கட்டி அதில் கர்ப்பிணியை 3 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி ஆளும் கட்சி (தெலுங்கு தேசம்) எம்எல்ஏ அனிதா வருத்தம் தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x