Published : 25 Sep 2024 07:17 PM
Last Updated : 25 Sep 2024 07:17 PM

காந்தி, மோடி, யோகி நடனமாடும் ஏஐ வீடியோ பதிவுக்கு எதிராக வழக்குப் பதிவு

பல்லியா(உ.பி): மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பெண் ஒருவருடன் நடனமாடுவது போல் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேகா சிங் ரத்தோர் என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பதிவிட்டதைத் தொடர்ந்து இது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் தனது பதிவில் அவர், "மிகவும் பிரபலமான, வெற்றிகரமான முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் அதிகாரத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சில ரீலர்ஸ் ஒரு சில வீயூஸுக்காக முதல்வர் யோகி படத்தை தவறான வகையில் பயன்படுத்தி உள்ளனர். இது மட்டும் இல்லாமல், பிரதமர் மோடி மற்றும் மகாத்மா காந்தி படங்களையும் மலிவான விளம்பரத்துக்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் போஜ்புரி பாடலுக்கு ஒரு பெண்ணுடன் நடனமாடுவது போல உள்ளது. இந்த வீடியோ விவகாரம் குறித்து, சைபர் தானாவின் ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரவீன் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் ஷா தெரிவித்துள்ளார். மேலும் "இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

— Neha Singh Rathore || नेहा सिंह राठौड़ (@imrowdy_rathore) September 24, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x