Published : 24 Sep 2024 06:18 AM
Last Updated : 24 Sep 2024 06:18 AM

இளைஞனை கொன்ற பாம்பை உயிருடன் எரித்த கிராமத்தினர்

கோப்புப் படம்

கோர்பா: சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டம், பைகமார் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் திகேஷ்வர் ரத்தியா. இவர் கடந்தசனிக்கிழமை இரவு தனது வீட்டில் படுக்கையை ஒழுங்குபடுத்தும்போது அதில் இருந்த விஷப் பாம்பு அவரை கடித்தது.

இது பற்றி அறிந்த குடும்பத்தினர் திகேஷ்வரை கோர்பாவில் உள்ள ஒரு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் காலையில் திகேஷ்வர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரதேசப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் திகேஷ்வரை கடித்த விஷப் பாம்பை அவரது வீட்டில் உயிருடன் பிடித்து கிராம மக்கள் அதனை ஒரு கூடையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் திகேஷ்வரின் உடல் மயானத்துக்கு கொண்டுசெல்லப்படும்போது, கிராமவாசிகள் அந்த பாம்பையும் கொண்டு சென்றனர். அவர்கள் அந்தப் பாம்பை கயிற்றை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

மயானத்தில் திகேஷ்வரின் உடல் தகனம் செய்யப்படும்போது, விஷப் பாம்பை கிராம மக்கள்உயிருடன் எரித்தனர். இந்த சம்பவம் குறித்து கோர்பா துணை மண்டல அதிகாரி ஆசிஷ் கெல்வார் கூறும்போது, “பாம்பை கொன்றதற்காக கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. பாம்புக்கடி சம்பவங்களை கையாளுவது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு பாம்புகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப் படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x