Published : 21 Sep 2024 11:28 AM
Last Updated : 21 Sep 2024 11:28 AM

விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்வதே ஜனநாயகத்தின் மிகப் பெரிய பரீட்சை: கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

புனே: தனக்கு எதிரான வலுவான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொண்டு அதை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி, எம்ஐடி - வோர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்பது மன்னன் தனக்கெதிராக வரும் வலுவான கருத்துக்களை பொறுத்துக்கொள்வதும், அதனை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதுமே ஆகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து என்பது பிரச்சினையே இல்லை . கருத்துகள் இல்லாமல் இருப்பதே பிரச்சினை. அதாவது நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. சந்தர்ப்பவாதி என்று இருப்பதே.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அச்சமின்றி தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மேன்மை பற்றிய கருத்துகள் நீடித்து இருக்கும் வரை தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி முழுமை அடைந்ததாக கூறமுடியாது.” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 9 Comments )
  • பிரபாகர்

    ஏழரை லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு பழிவாங்க ஆரம்பித்துவிட்டார் கட்கரி என்று புரிகின்றது.

      பிரபாகர்

      பாலரத்னா நண்பரே, அதே தான். அமித்சா மற்றும் நிர்மலா மீது நாக்பூருக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு ராஜ்நாத் சிங் மற்றும் கட்கரி மீது மட்டுமே நம்பிக்கை உண்டு. அதில் ராஜ்நாத் சிங்குக்கு திறமை பத்தாது என்று நாக்பூர் நம்புகின்றது. கட்கரி மட்டுமே அவர்களின் அடுத்த சாய்ஸ். மற்றொரு விவகாரம், இவர்கள் நால்வர் தவிர்த்து... பட்நாவிஸ் மீதும் நாக்பூருக்கு நம்பிக்கை உண்டு. அதனால் தான்... முதல்வர் ஆகவேண்டிய பட்நாவிசை துணை முதல்வராக்கி அவமானப்படுத்தினர் மோடி-ஷா கூட்டணி.

      0

      0

      பாலரத்னா

      பிரபாகர் - இந்த குற்றசாட்டை நான் இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கிறேன் நண்பரே. கட்சியின் விதிமுறைகளை நேர்மையாக கடைபிடித்தால் மோடி தனது 75 வது வயதில் பதவி விலகவேண்டும். அப்படி பதவி விலகும் இடத்திற்கு அமித் ஷா, நிர்மலா, ராஜ்நாத் சிங், கட்காரி ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. இந்த நால்வரில் கட்காரி மட்டும் தான் தனது மனதில் பட்ட நல்லது கெட்டதை துணிச்சலாக கூறும் தன்மை படைத்தவர். மற்ற மூவரும் மோடியின் கண்ணசைவுக்கு ஏற்பத்தான் செயல்படுவார்கள். ஏற்கனவே 2G வழக்கில் CAG யின் குற்றசாட்டு அறிக்கை எந்த அளவுக்கு உண்மைத்தன்மையாக இருந்தது என்பது உலகுக்கே தெரியும். அதனால் தனது வழக்கமான குள்ளநரி தந்திரங்களால் கட்காரியை போட்டியில் இருந்து விலகவைக்க அவர் மீது CAGயை வைத்து ஊழல் குற்றசாட்டு சாட்டப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் இருக்கிறது. எல்லாம் ஒற்றைமனிதருக்கே வெளிச்சம்.

      1

      0

  • பாலரத்னா

    ////இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து என்பது பிரச்சினையே இல்லை . கருத்துகள் இல்லாமல் இருப்பதே பிரச்சினை. அதாவது நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. சந்தர்ப்பவாதி என்று இருப்பதே. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அச்சமின்றி தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது./// - எதிர்கருத்துக்கள் கூறுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்கருத்துக்களை காதுகொடுத்து கேட்கும் பழக்கம் தான் பிரதமர் பதவியில் இருப்பவருக்கு இல்லை. அந்த பழக்கம் இருந்தால் பத்திரிகையாளர்களுக்கு தான் நினைத்த செய்திகளை மட்டும் ஒருவழிபாதையாக் அறிவித்துவிட்டு, பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அஞ்சிநடுங்கி அவர்களுடைய பேட்டியை தவிர்க்கமாட்டார். அதனால் கருத்துக்கள் இல்லாமல் இருப்பதே பிரச்சினை என்று கட்காரி கூறுவது தவறான வாதம்.

 
x