Published : 19 Sep 2024 04:52 AM
Last Updated : 19 Sep 2024 04:52 AM

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியுடன் ஆதிஷி சிங்கின் பெற்றோருக்கு தொடர்பு: ஸ்வாதி மாலிவால் மீண்டும் விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிஷியை அவரது கட்சியின் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர்களுடன் ஆதிஷி சிங் மர்லேனாவின் பெற்றோர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக முதல்வர் பதவிக்கு அமைச்சர் ஆதிஷியின் பெயரை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆதிஷியை ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால்விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் நேற்று முன்தினம் வெளியிட்ட பதவில், “டெல்லிக்கு இன்று சோகமான நாள். தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்படாமல் அவரை காப்பாற்றுவதற்காக ஒரு குடும்பம் நீண்ட போராட்டம் நடத்தியது. அந்த குடும்பத்தில் இருந்து வந்த பெண்தான் டெல்லி முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். ஆதிஷி வெறும் ‘டம்மி' முதல்வர்தான் என்றாலும் இந்த விவகாரம்நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. கடவுள் டெல்லியை பாதுகாக்கட்டும்’’ என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஆம்ஆத்மி கட்சி, ‘‘ஸ்வாதி மாலிவால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் வழியை தேர்வு செய்ய வேண்டும்’’ என்றது. இந்நிலையில் ஆதிஷியை ஸ்வாதி மாலிவால் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

அப்சல் குரு நினைவு நிகழ்ச்சி: இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சையது அப்துல் ரஹ்மான் கிலானியுடன் ஆதிஷியின் பெற்றோர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். இவர்கள் 2016-ல்அப்சல் குரு (நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்டவர்) நினைவாக டெல்லிபிரஸ் கிளப்பில் நிகழ்ச்சி ஒன்றைஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கிலானியுடன் ஆதிஷியின் பெற்றோர் மேடையில் இருந்தனர். ‘ஒரு அப்சல் குரு இறந்தால், லட்சம் அப்சல் குரு பிறப்பார்கள்' என்று இந்த நிகழ்ச்சியில் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆதிஷியின் பெற்றோர் ‘சையது கிலானியின் கைதும் சித்ரவதையும்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர். கடவுள்டெல்லியை பாதுகாக்கட்டும்! இவ்வாறு ஸ்வாதி மாலிவால் தனது பதிவில் கூறியுள்ளார்.

தாக்கப்பட்டதாக புகார்: ஸ்வாதி மாலிவால் கடந்த மேமாதம் ஜாமீனில் வந்த அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க டெல்லிமுதல்வர் வீட்டுக்கு சென்றார். அப்போது கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஸ்வாதி புகார் அளித்ததை தொடர்ந்து, பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். இதனால் ஸ்வாதி, ஆம் ஆத்மி கட்சியின் விரோதத்துக்கு ஆளானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x