Published : 14 Apr 2014 10:43 AM
Last Updated : 14 Apr 2014 10:43 AM

மாவோயிஸ்ட் பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் வாக்குப்பதிவு 2 மணி நேரம் குறைக்கப்படுவதாக மாநில முதன்மை தேர்தல் அதிகாரி சுனில் குப்தா சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில், இம்மாநிலத்தின் ஜர்கிராம், புரூலியா மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதிகளில் (தலா 3 தொகுதிகள்) வாக்குப் பதிவு 2 மணி நேரம் குறைக்கப்படுகிறது.

இங்கு வாக்குப்பதிவு மே7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியுடன் முடிவடையும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x