Published : 16 Sep 2024 05:00 AM
Last Updated : 16 Sep 2024 05:00 AM

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை

கோப்புப் படம்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள்அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன்போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்தமுகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளியுறவுத் துறை முயற்சி: இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம்வெளியுறவுத்துறை அமைச்சகம்வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமதுசுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது:

வேலை மோசடி: வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது.

பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில்உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள்எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்பவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x