Published : 09 Jun 2018 08:06 AM
Last Updated : 09 Jun 2018 08:06 AM
ஆந்திரத் தலைநகர் அமராவதிக்கு குடிநீர் விநியோகத்திற்காக கிருஷ்ணா நதி மீது ரூ.2,169 கோடி செலவில் புதிய அணையை கட்ட ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த நகரின் குடிநீர் விநியோகத்திற்காக குண்டூர் - விஜயவாடா இடையே புதிய அணையை கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இப்பகுதியில் உள்ள கிருஷ்ணா நதி மீது வைகுண்டபுரம் அருகே 23 கி.மீ தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட உள்ளது.
இதற்காக ரூ. 2,169 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 டிஎம்சி கொள்ளவு குடிநீர் தேக்கப்பட்டு, அமராவதி மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT