Published : 17 Jun 2018 04:26 PM
Last Updated : 17 Jun 2018 04:26 PM
ஆந்திர மாநிலம், குப்பம் வனப்பகுதியில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து குப்பம் போலீஸார் கூறியதாவது:
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து, ஆந்திர மாநிலம், குப்பம் வழியாக இரவு 10 மணியளவில் மாங்காய்கள் ஏற்றி சென்ற சரக்கு லாரி, குப்பம் அருகே உள்ள நாயனூரு வனப்பகுதி வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, வனப்பகுதியில் ஒரு வளைவில் லாரி நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்துக்கொண்டிருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 கூலி ஆட்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும், இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், குப்பம் போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை குப்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்க தீயணைப்பு படையினர், உள்ளூர் ஆட்கள், கிரேன் போன்றவை வரவழிக்கப்பட்டன. ஆனால், வனப்பகுதி என்பதால் பயங்கர இருட்டாக இருப்பதால், மீட்பு பணிகள் தாமதமாகிறது. ஆயினும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT