Published : 08 Jun 2018 08:18 AM
Last Updated : 08 Jun 2018 08:18 AM
ஆந்திர மாநில பிரிவினைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாநில சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் அமல்படுத்தாத காரணத்தால், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது.மேலும், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸையும் தெலுங்கு தேசம் கட்சி வழங்கி இருந்தது. இதனால், தெலுங்கு தேசம் - பாஜக இடையேயான மோதல் முற்றியது.
இதனைத் தொடர்ந்து, இந்த இரு கட்சியினர் இடையே கடும் கருத்து மோதல் எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமிநாராயணா தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள், ஹைதராபாத் சென்று ஆளுநர் நரசிம்மனை சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்யும் ஆந்திர அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பான புகார் மனுவையும் அவர்கள் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT