Published : 09 Sep 2024 07:42 AM
Last Updated : 09 Sep 2024 07:42 AM

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

சரன்: ஹார் மாநிலத்தில் போலி டாக்டர்ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரன் மாவட்டத்தை சேர்ந்தவர்கிருஷ்ண குமார் (15). இந்த சிறுவன் பலமுறை வாந்தி எடுத்ததால்அவரது பெற்றோர் சரன் நகரில்உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்அஜித் குமார் புரி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளது. அதனால்தான் அவருக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு மூச்சு திணறல்ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த யூடியூப் போலி மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மும்பையின் மல்வானியில் தனது மனைவியின் இளங்கலை யுனானி மருத்துவப் படிப்பை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அவரது கணவர் பர்வேஸ் அப்துல் அஜிஸ் ஷேக்கை (46) கடந்த மார்ச் மாதம் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x