Published : 02 Sep 2024 04:48 AM
Last Updated : 02 Sep 2024 04:48 AM

பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் தன்னுடைய இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்: ஐ.நா. முன்னாள் தலைவர் கருத்து

ஐநா முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி | கோப்புப் படம்

புதுடெல்லி: ஐநா அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும் ஐநா முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி தெரிவித்துள்ளார்.

கிஷோர் மஹ்பூனி ஐநாவுக்கான சிங்கப்பூரின் முன்னாள் பிரதிநிதியாகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் வழங்குவது குறித்து அவர் கூறுகையில், “இன்று அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு உலகின் அதிகாரமிக்க நாடாக இந்தியா உள்ளது. பிரிட்டன் தன்ஆதிக்கத்தை இழந்துள்ளது. தவிர, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் பல ஆண்டுகளாக தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவேயில்லை. அந்தவகையில், பிரிட்டன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தன்னுடைய இடத்தை இந்தியாவுக்கு வழங்குவதே பொருத்தமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பிறகு, நாடுகளிடையே நிரந்தர அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்கும் வகையில், 1945-ம் ஆண்டு அமெரிக்காவில் 51 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. ஐநா சபையில், நீதி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு கிளை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. அந்தக் கிளை அமைப்புகளில் பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் பொருந்திய அமைப்பாகும்.

மற்ற ஐநா அமைப்புகளால் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலிடம் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம்உள்ளது. ஆனால், இந்தக் கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே இன்று வரை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ஏனைய நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இருக்க மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியா 16 ஆண்டுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இருந்துள்ளது.

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரஇடம் வழங்க வேண்டும் என்றகோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஐநா அமைப்புகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என்றும் இந்தியாவையும் ஆப்ரிக்காவையும் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும்எலான் மஸ்க் இவ்வாண்டு தொடக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x