Published : 31 Aug 2024 05:21 AM
Last Updated : 31 Aug 2024 05:21 AM

ரூ.76,000 கோடியில் வத்வான் துறைமுக திட்டம்: மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வத்வான் துறைமுக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடன், மத்திய அமைச்சர்கள் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், சர்பானந்த சோனோவால், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர். படம்: பிடிஐ

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பால்கர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட வுள்ள வத்வான் துறைமுக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்ததுறைமுக திட்டம் ரூ.76,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: வத்வான் துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த கடல்வழி நுழைவுவாயிலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில், பெரிய கொள்கலன் கப்பல்கள், அதி-பெரிய சரக்குக் கப்பல்களுக்கு இடமளிப்பதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெருகும்.

தஹானு நகருக்கு அருகில்அமையவுள்ள வத்வான் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகவும், சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதாகவும் இருக்கும். இதன் மூலம்,போக்குவரத்துக்கான நேரம் மட்டுமின்றி, செலவுகளையும் கணிசமாக குறைக்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வத்வான் திட்டத்தை தொடர்ந்து ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்பிடித் திடங்களுக்கும்பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்நாட்டினார். இந்த திட்டங்கள் மீன்பிடித் துறையில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் 13 கடலோர மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் உள்ளஇயந்திர மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி கப்பல்களில் ஒரு லட்சம் டிரான்ஸ்பாண்டர்கள் படிப்படியாக நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் ஃபின்டெக்: குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் 31 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ள ஃபின்டெக் துறையை ஊக்குவிக்கவும், ஏஞ்சல் வரியை ரத்து செய்யவும் கொள்கை அளவில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 31 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை ஃபின்டெக் ஈர்த்துள்ளது. ஃபின்டெக் ஸ்டார்ட் அப்கள் 500 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன.

முத்ரா கடன்: உலகின் மிகப்பெரிய சிறுகடன் திட்டமான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்று 53 கோடிக்கும் அதிகமான மக்கள்ஜன்தன் கணக்குகளை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய மக்கள் தொகைக்குஇணையான நபர்களை வங்கிஅமைப்புடன் இணைத்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x