Last Updated : 20 Jun, 2018 02:43 PM

 

Published : 20 Jun 2018 02:43 PM
Last Updated : 20 Jun 2018 02:43 PM

மாட்டுக்காக ஓர் அமைச்சகம்: மத்திய பிரதேச அமைச்சர் கோரிக்கை

மத்திய பிரதேசத்தில் மாட்டுக்காக தனியாக ஓர் அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என மாநில அமைச்சர்  ஸ்வாமி அகிலேஷ்வரனாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ராஜஸ்தானில் மாடுகளின் நலனுக்கென்று ஒரு அமைச்சகம் உள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் மகிழ்ச்சிக்காக ஓர் அமைச்சகம் செயல்படுகிறது. ஆனால் முக்கய தேவையாக மாடுகளின் நலனுக்காக அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும். மாட்டுக்காக ஒரு அமைச்சகத்தை உருவாக்கினால் டுதலான வரவுசெலவு திட்டங்கள் உருவாகும். மேலும் விலங்குகள் பிரிவிலிருந்து மாடு அகற்றப்பட வேண்டும்.

இதுகுறித்து முதல்வர் சவுகானிடம் நான் பேசியுள்ளேன். அவர் மாடுகளுக்காக வென்று இருந்த கொட்டகை வீடுகள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும் என்று என்னிடம் தெரிவித்தார். இதற்காக பெரிய அளவில் நிதி பற்றாக்குறை ஏற்படாது. இதற்காக செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் கடமை உணர்வும்தான் தேவை.

தேசிய வேளாண்மை மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் தலைவராக முதல்வர் சவுகான் உள்ளார். எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மாநில அரசு ரூ.15 ஆயிரம் கோடி இத்திட்டத்திற்காக பெற்றுள்ளது. இதில் எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்று நான் கேட்டேன்.

அதில் அரை சதவீதம் அளவுக்கே செலவிடுவது அதிகம் என்றார்கள். அப்படியென்றால் இதில் மீதி ஏற்படுவது இழப்புதானே. பசுப் பாதுகாப்பு வாரியத்தின் ஒரு பகுதியாக ரூ. 1000 கோடி நிதியை வழங்க வேண்டும்.

மாட்டு நலன் குறித்து ஒரு வலுவான மன உறுதியும் எனக்கு உண்டு, நான் எந்த அரசியலமைப்புக்கு மாற்றான கோரிக்கை எதையும் நான் வைக்கவில்லை’’ எனக் கூறினார்.

மத்தியப் பிரதேச அரசு, மாநில பசுப் பாதுகாப்பு வாரியத்தின் தலைவராக இருந்த அகிலேஷ்வரனாந்த்தாவை அமைச்சராக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x