Published : 27 Aug 2024 03:50 AM
Last Updated : 27 Aug 2024 03:50 AM

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக பாஜக, ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மூத்த நிர்வாகிகள் சிலரது பெயர் இல்லாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி இடையேதொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.

காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதில் 24 தொகுதிகளில் நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், 44 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளி யிட்டது.

இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகள், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகள், மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 19 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. எனினும், அடுத்த சில மணி நேரங்களில் இந்த பட்டியலை பாஜக திரும்ப பெற்றது. பின்னர், முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கான 15 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் வெளியிட்ட பட்டியலில் மேலும் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

முதல்கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 16 வேட்பாளர்களை மட்டுமே பாஜக அறிவித்துஉள்ளது.

இதுபோல, காங்கிரஸ் கட்சி யில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி 13 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

காங். கூட்டணியில் உடன்பாடு: இத்தேர்தலில் காங்கிரஸும், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடும். 5 தொகுதிகளில் 2 கட்சிகளும் போட்டியிடும். எனினும், இந்த போட்டி நட்பு ரீதியில் இருக்கும். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்க மாட்டோம். மார்க்சிஸ்ட் 1, சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் போட்டியிடும்” என்றார்.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. 7 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி யில் பாஜகவுக்கு குறைந்த அளவே செல்வாக்கு உள்ளது. இதனால், இந்த பிராந்தியத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடும் என தெரிகிறது. ஜம்மு பிராந்தியம் பாஜகவின் கோட்டையாக உள் ளது. ஆனால், இத்தேர்தலில் காங்கிரஸும், தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது, பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x