Published : 26 Aug 2024 04:18 AM
Last Updated : 26 Aug 2024 04:18 AM
புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்துக்கு யார் செல்கிறார்கள்?’ என்ற தலைப்பிலான அறிக்கையை தன்னார்வலநிறுவனம் பிரஜந்த்ரா வெளியிட்டுஉள்ளது.
அதில் தற்போது உள்ள 18-வது நாடாளுமன்றத்தில் 543 மக்களவை உறுப்பினர்களில் 32 சதவீத உறுப்பினர்கள் வாரிசு அடிப்படையில் அரசியலில் நுழைந்தவர்கள் ஆவர். இதில் 21 சதவீதம் பேர் முதல் தலைமுறையினர் என்றும் 72 சதவீதம் பேர் இரண்டாம் தலைமுறையினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரிசு அரசியல் பின்புலத்தைக் கொண்ட வேட்பாளர்களை அதிகம்களம் இறக்கிய கட்சியாக பாஜக உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வாரிசு அரசியல் பின்புலத்தைக் கொண்ட 110 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது. இது பாஜகவின் மொத்த வேட்பாளர்களில் 24.8 சதவீதம் ஆகும். இவர்களில் 62 பேர் தேர்தலில் வெற்றிபெற்றனர்.
இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ், வாரிசு அரசியல் பின்புலத்தைக் கொண்ட 99 வேட்பாளர்களை களமிறக்கியது. இது அதன் மொத்த வேட்பாளர்களில் 30.3 சதவீதம் ஆகும். இவர்களில் 43 பேர் வெற்றிபெற்றனர்.
மொத்த எம்.பி.க்களில் 61சதவீதத்தினரின் சொத்து மதிப்புரூ.5 கோடிக்கு மேல் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT