Published : 23 Aug 2024 12:31 AM
Last Updated : 23 Aug 2024 12:31 AM
குருகிராம்: ஹரியாணா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
“தேர்தல் தொடர்பாக நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் ஹரியாணா மக்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக உள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நயாப் சிங் சைனி தெரிவித்தார்.
“தேர்தல் சார்ந்து தொகுதி வாரியாக எங்களது ஆலோசனை அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்துள்ள மனுக்களை பரிசீலித்து வருகிறோம். இதற்கென ஒரு குழுவும் அமைக்கப்படும். அதன் பிறகு அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஹரியாணாவில் மீண்டும் பாஜக அரசு அமையும்” என முன்னாள் மாநில அமைச்சர் அனில் தெரிவித்துள்ளார்.
90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ள ஹரியாணா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேடி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே வலுவான போட்டி நிலவுகிறது. வேட்பு மனு தாக்கல், மனு பரிசீலனை என தேர்தல் சார்ந்து அனைத்து நடைமுறையும் அங்கு அடுத்த மாதம் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT