Published : 15 May 2018 05:26 PM
Last Updated : 15 May 2018 05:26 PM
மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவரின் மகன் குமாரசாமி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தங்கள் கட்சி ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையை நோக்கிச் செல்கிறது, பாஜக 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 77 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை தங்கள் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக கர்நாடக மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டதாகவும் முன்னால் செய்திகள் எழுந்தன. காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் முன்னதாகக் கூறும்போது, “நாங்கள் தேவகவுடா, குமாரசாமி ஆகியோருடன் தொலை உரையாடல் மேற்கொண்டோம் அவர்கள் எங்கள் ஆதரவை ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் கர்நாடக ஆளுநர், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக இருப்பதால் முதலில் பாஜகவை அழைப்பாரோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT