Published : 14 Aug 2024 04:07 AM
Last Updated : 14 Aug 2024 04:07 AM

இந்தியாவை துச்சமாக பார்க்கிறது ‘ஹிண்டன்பர்க்’ - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே விமர்சனம்

புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி)தலைவர் மாதபி புரி புச் பங்குகளைக் கொண்டிருந்தார் என்றும்இதன் காரணமாக அதானி நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் அதானியின் முன்னாள் வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, கூறும்போது, ‘‘ஹிண்டன்பர்க் வெளியிடும் அறிக்கைகளை மற்ற நாடுகள் மதிப்பதேயில்லை. ஆனால், இந்தியாவில்அரசியல் கட்சியினர் ஹிண்டன்பர்க் அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது வெட்கக்கேடானது.

ஹிண்டன்பர்க் இந்தியாவை துச்சமாக பார்க்கிறது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது. அது போன்ற அமைப்புகளின் அறிக்கைகளை அனுமதித்தால், ஒரு நாள் அவை நம் நீதி அமைப்பையே கேள்விக்கு உட்படுத்திவிடும்” என்றார்.

ஏறி இறங்கிய பங்குகள்: ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக் கும் புதிய அறிக்கையால் இந்தியபங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைசந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. தவிர, முந்தைய அறிக்கையால் ஏற்பட்ட சரிவுடன் ஒப்பிடுகையில், இதுவரையில் அதானி பங்குகளிலும் பெரிய பாதிப்பு இல்லை.

ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கையைத் தொடர்ந்து, மோர்கன்ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷனல், அதானி குழும பங்குகளின் மீதான மதிப்பீட்டில் கட்டுப்பாடு விதித்தது. அதானி பங்குகள் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளாத நிலையில், நேற்று அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் வர்த்தக நேரத்தில்,அதானி பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கின. சில பங்குகள் 6 சதவீதம் வரை ஏறின. ஆனால், வர்த்தக முடிவில் அவை இறக்கம் கண்டன.

22-ல் நாடு தழுவி போராட்டம்: காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது: ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செபி தலைவர் மாதபி புரியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வரும் 22-ம் தே்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரக (இ.டி.) அலுவலகங்களுக்கு வெளியே இந்த போராட்டம் நடை பெறும்.

ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி மற்றும் செபி தொடர்பான ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் விவாதிக்கப்பட்டது. இந்த ஊழலி்ல் பிரதமர் மோடிக்கும்தொடர்பு உள்ளது. எனவே, இரண்டுகோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் போராட்டம்நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று அதானி மெகாஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணைநடத்த வேண்டும். ஏனெனில் இதில் நிதிச் சந்தை ஒழுங்குமுறைகடுமையாக சமரசம் செய்யப்பட்டிருப்பது இப்போது கண்டறியப் பட்டுள்ளது. இவ்வாறு வேணு கோபால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x