Published : 13 Aug 2024 04:54 AM
Last Updated : 13 Aug 2024 04:54 AM
ஹைதராபாத்: தேசிய பறவையான மயில் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி கொல்வது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். அப்படி இருந்தபோதிலும், சிலர் பொழுது போக்குக்காகவும், பிழைப்புக்காகவும் மயில்களை வேட்டையாடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம், தங்கனபல்லிஎனும் கிராமத்தை சேர்ந்தவர் பிரணய் குமார். யூடியூபரான இவர்காட்டுப் பன்றி மாமிசம் சமைப்பதுஎப்படி? எனும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார். இதற்குவனவிலங்கு ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு எழும்பியுள்ளது.
பலர் யூடியூப் நிர்வாகத்துக்கு இ-மெயில் மூலமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட 2 வீடியோக்களையும் பிரணய் குமார் நீக்கிவிட்டார்.
இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து வீடியோ பதிவுகளை அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தேசிய பறவையான மயிலை பிரணய் குமார் சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடி, கொன்று, அதனை சமைப்பது எப்படி எனும்வீடியோவை கடந்த 3-ம் தேதி பதிவிட்டதால், அவர் மீது வனசட்டங்களின்படி தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டுமென சிலர் வனத்துறையினருக்கும், சிரிசில்லா போலீஸாருக்கும் புகார் அளித்தனர். அதன் பேரில் சிரிசில்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரணய் குமாரை கைது செய்தனர். இதுகுறித்து அம்மாவட்ட போலீஸ்எஸ்பி அகில் மஹாஜன் கூறு கையில், ‘‘பிரணய் குமார் வீட்டில் மீதமிருந்த மயில் கறியை பறிமுதல் செய்துள்ளோம். அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
இதேபோன்று தெலங்கானாவை சேர்ந்த மற்றொரு சேனலும்வன விலங்குகளை கொன்று அதனை சமைப்பது குறித்த வீடியோவை தொடர்ந்து பதிவிட்டுவருகிறது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இது போன்று,வன விலங்குகளை வேட்டையாடுவது, கொல்வது, சமைப்பது சம்பந்தபட்ட 1,158 வீடியோ பதிவுகள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT