Published : 09 May 2018 07:22 AM
Last Updated : 09 May 2018 07:22 AM
திருப்பதி மலைப்பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை பலியானது.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது, இரை, குடிநீர் தேடி பக்தர்கள் நடமாடும் பகுதிக்கு வருவதால், பக்தர்கள் பெரும் பீதி அடைகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளது. மேலும், பக்தர்களை அடித்து கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளதால், நடைபாதை இரவு நேரத்தில் மூடப்பட்டு, அதிகாலை திறக்கப்படுகிறது. இந்த இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2வது பாதையில், 12வது வளைவில், சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று, வாயில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்ற பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வன அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து போன சிறுத்தையை அங்கிருந்து அகற்றினர். அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என வன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT