Published : 08 Aug 2024 04:55 AM
Last Updated : 08 Aug 2024 04:55 AM

வங்கதேசத்தில் முக்கியத்துவம் அல்லாத இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் முக்கியத்துவம் அல்லாத இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் டாக்கா நகரில்இந்திய தூதரகம் செயல்பட்டுவருகிறது. இதுதவிர வங்கதேசத்தின் சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா, சில்ஹெட் ஆகிய பகுதிகளில் இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளன. தற்போது வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரணசூழல் தொடர்பாக இந்திய அரசின்நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்றும்; வங்கதேசத்தில் அமைதி திரும்பியதம் இந்திய தூதரகங்கள் வழக்கம்போல் செயல்படும் சூழல் ஏற்படும் என்றும் இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களில் முக்கியத்துவம் அல்லாத பணிகளில் உள்ள ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயணிகள் விமானம் மூலம் இந்தியா திரும்பலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

400 இந்தியர்கள் வருகை: வங்கதேசத்தில் இருந்து விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x