Published : 07 Aug 2024 04:41 AM
Last Updated : 07 Aug 2024 04:41 AM
மும்பை: கடந்த 2021-ல் மணமுடித்து வாழ்ந்து வந்த மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதி பரஸ்பர சம்மதத்துடன் அண்மையில் விவாகரத்து கோரினர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கவுரி கோட்சே அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
பொதுவாக கணவன்-மனைவி இருவரில் யாரோ ஒருவர் மண முறிவு பெற வேண்டி நீதிமன்றத்தை நாடும்போது அவர்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்த நீதிமன்றம் முயலும். அதுவே தம்பதி கலந்து பேசி பிரிவதெனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகு அதனை நியாயமான முறையில் நீதிமன்றம் அணுக வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் இளம் தம்பதியினர் என்பதால் அவர்களது விவாகரத்து கோரிக்கையை நிலுவையில் வைப்பதால் அவர்களுக்கு மன வேதனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரும்போது 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தைத் தளர்த்தி மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபட உதவுவது நீதிமன்றத்தின் கடமையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரிய தம்பதிக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று முடிவெடுத்து விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT