Published : 03 Aug 2024 05:28 PM
Last Updated : 03 Aug 2024 05:28 PM

நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றுமாறு அமித் ஷா வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்க்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது தேசியக் கொடியான மூர்ணக்கொடி தியாகம், விசுவாசம் மற்றும் அமைதியின் சின்னமாகும். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளாக முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக இது ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளது.

மூர்ணக் கொடியை ஏற்றும் இந்த நிகழ்வு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மாவீரர்களை நினைவுகூர்கிறது. தேசம்தான் முதலில் என்ற உறுதிமொழியை எடுக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது. இதற்காக மேற்கொள்ளப்படும் #HarGharTiranga பிரச்சாரம் தேசத்தின் நீள அகலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை ஒற்றுமையை எழுப்புகிறது.

இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் அதே ஆர்வத்துடன் இதில் பங்கேற்கவும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நமது பெருமை, நமது மூர்ணக்கொடி. வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூர்வணக்கொடியை நீங்கள் உங்கள் வீடுகளில் ஏற்றி, மூர்ணக்கொடியுடன் செல்ஃபி எடுத்து, அதனை https://hargartiranga.com என்ற இணைதளத்தில் பதிவேற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே கோரிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையின் பேரில் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினத்தை முன்னிட்டு #HarGharTiranga பிரச்சாரத்தில் அனைத்து இந்தியர்களும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சகத்துடனும் பங்கேற்று வருகின்றனர்.

இம்முறையும் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை உங்கள் இல்லங்களில் இந்தியாவின் பெருமை மற்றும் புகழின் அடையாளமான தேசியக் கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டில் 'மூவர்ணக் கொடியை' ஏற்றுவதுடன் செல்ஃபி எடுத்து http://hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றவும். இந்த பிரச்சாரத்தில் நீங்கள் பங்கேற்பதோடு, மற்றவர்களையும் இதில் பங்கேற்க ஊக்குவிக்கவும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, கஜேந்திர சிங் ஷெகாவத் என பலரும் இதே கோரிக்கையை தங்கள் எக்ஸ் பக்கத்தின் மூலம் முன்வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x