Published : 13 Aug 2014 11:00 AM
Last Updated : 13 Aug 2014 11:00 AM

பாஜக தலைமை அலுவலகத்தில் தினம் ஒரு மத்திய அமைச்சருக்குப் பணி: தேசிய பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் முடிவு

பா.ஜ.க.வினர் கொண்டு வரும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தினம் ஒரு மத்திய அமைச்சரை பணியில் அமர்த்துவது என அந்தக் கட்சியின் தேசிய பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக கட்சியின் தேசிய செயற்குழு, பொதுக் குழு கூட் டம் ஆகஸ்ட் 9-ம் தேதி டெல்லியில் நடை பெற்றது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

தேசிய பொதுக்குழுவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய கருத்துக்கள் எங்களை ஆச்சரியப்பட வைத்தன. ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதற்காக நாம் மிதப்பாக இருக்கக் கூடாது. மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், சூரிய சக்தி மின்சார உற்பத்தி, கிராமங் களில் கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட் டவை குறித்து பாஜக தொண் டர்கள் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்திருப்பது மற்ற கட்சிகளைப் போல கட்சிக்காரர்களை சம்பாதிக்க வைப்பதற்காக அல்ல. நாட்டை நல்வழிப்படுத்துவதற்கான ஒரு வேள்வியை நாம் தொடங்கி இருக்கிறோம். இந்த வேள்வி நல்லபடியாக முடிந்தால் நாடும் நாமும் வளமாக இருக்கலாம். இப்படி உற்சாகமாகப் பேசினார் மோடி.

தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக் காக கட்சிக்காரர்கள் எவரும் அமைச்சர் களையோ அதிகாரிகளையோ தொல்லைப் படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மோடி, அதேசமயம் பொதுப் பிரச்சினையாக இருந்தால் அமைச்சர் களின் கவனத்துக்கு கொண்டு வாருங் கள். அவர்கள் செய்து கொடுக்கத் தயங்கினால் தாராளமாக என்னிடம் பிரச்சினையை கொண்டு வாருங்கள் என்றும் சொன்னார். கட்சிக்காரர்கள் கொண்டு வரும் பொதுப் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு சொல்வதற்காகவே டெல்லி யில் உள்ள பாஜக தலைமை அலுவல கத்தில் இனி தினம் ஒரு மத்திய அமைச் சரை சுழற்சி முறையில் அமர வைப்பது எனவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x