Published : 30 Jul 2024 05:42 AM
Last Updated : 30 Jul 2024 05:42 AM

முஷாரப்புக்கு அஞ்சலி செலுத்தியதால் கேரளாவில் பேங்க் ஆப் இந்தியா கூட்டத்தில் பெரும் சர்ச்சை

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25-வது வெற்றி தினம் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்த வெற்றி தினத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், மறுநாள் ஜூலை 27-ம் தேதி, கேரளாவின் ஆலப்புழாவில் நடந்த பேங்க் ஆப் இந்தியாவின் ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கவுரவிக்கப்படும் முக்கிய தலைவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷாரப்பின் பெயரும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது.

இந்த நிலையில், பேங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்கம் அளித்துள்ள விளக்கத்தில், “ மாநில மாநாட்டில் கவுரவிக்கப்படும் தலைவர்களின் பட்டியலில் அச்சுப் பிழை காரணமாக முஷாரப்பின் பெயர் இடம்பெற்றுவிட்டது. தவறைஉணர்ந்தவுடன் அது சரி செய்யப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரைப் பற்றி எந்தவித குறிப்பும் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றது" என்று தெரிவித்துள்ளது.

கடந்த 1999-ல் கார்கில் போர் நடைபெற்றபோது பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருந்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். அவரின் தலைமையின் கீழ்தான் கார்கில் போர் நடைபெற்றது. அதன் பிறகு 2001-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானின் 10-வது அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x