Published : 29 Jul 2024 04:17 AM
Last Updated : 29 Jul 2024 04:17 AM

கடந்த 5 ஆண்டில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்தியமாணவர்களில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனில் 18, ஜெர்மனியில் 24, ஜார்ஜியா, கிர்கிஸ்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் தலா 12 பேர்,சீனாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தாக்குதல் சம்பவங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டில் 19 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கனடாவில் 9, அமெரிக்காவில் 6 பேர் உயிரிழந்தனர்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர்இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட் டுள்ளனர். இதற்கான காரணத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இவ்வாறு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x