Published : 28 Jul 2024 07:05 AM
Last Updated : 28 Jul 2024 07:05 AM

என் குழந்தையை தத்தெடுக்க அனுமதி வேண்டும்: விவாகரத்தான பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு

கோப்புப்படம்

புதுடெல்லி: முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க அனுமதி கோரி விவாகரத்தான பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் திவ்யா ஜோதி சிங்குக்கும் மற்றொரு வழக்கறிஞருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2015-ல் திவ்யா கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவர் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.

பின்னர், அவர் திவ்யாவின் சகோதரர் மனைவியுடன் தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது. 2015-ல் திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகும் கணவர்தனது வீட்டுக்கு செல்லவில்லை.

இதையடுத்து, இருவரும் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்த குடும்பநல நீதிமன்றம் 2016-ம் ஆண்டு விவாகரத்து வழங்கி உள்ளது. எனினும், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் வழங்கப்பட்டது. 2018-ல் திவ்யாவின்முன்னாள் கணவருக்கும் திவ்யாவின் சகோதரர் மனைவிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துஉள்ளது.

கடந்த 2020-ல் திவ்யா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 2-வது கணவரும் அவரது குடும்பத்தினரும் திவ்யாவின் குழந்தையை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனிடையே, குழந் தையை பராமரிப்பதில் முதல்கணவருக்கும் திவ்யாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

மன உளைச்சல்: இதையடுத்து, திவ்யா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார். அதில், “முதல்கணவரின் செயலால் மிகவும்மன உளைச்சலால் திவ்யா பாதிக்கப்பட்டார். தனது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக மறு திருமணம் செய்து கொண்டார். இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டுமானால் அக்குழந்தையின் தந்தையின் அனுமதி வேண்டும். ஆனால், திவ்யா தனது முதல்கணவருடன் பிறந்த குழந்தையை அவருடைய அனுமதி இல்லாமல் தத்தெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனகூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து பதில் அளிக்குமாறு திவ்யாவின் முதல்கணவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x