Published : 27 Jul 2024 12:12 PM
Last Updated : 27 Jul 2024 12:12 PM
குப்வாரா: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று (சனிக்கிழமை) தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் (பேட்) நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்த போது இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டேக்கள் மற்றும் தீவிரவாதிகள் அடங்கிய குழு முன்பு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வழியாக எல்லை தாண்டியதாக தெரிய வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் குப்வாராவில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது. மாவட்டத்தின் காம்காரி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடந்து அங்கு ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியது. சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்ததால், காயம்பட்ட வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
இந்திய ராணுவத்துக்கு எதிராக எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் குழு நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றி கரமாக முறியடித்தது. தாக்குதல் நடந்திய அக்குழுவில் பாகிஸ்தானின் வழக்கமான ராணுவ குழுவினருடன், தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பணி புரியும் அவர்களின் எஸ்எஸ்ஜி கமாண்டோக்களும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று ராணும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 24 அன்று குப்வாராவின் லோலாப் பகுதியில் இரவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, 40 முதல் 50 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான பகுதிகளில் ஊடுருவி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தியா ராணுவம் பரந்த அளவிலான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்தப் பகுதிகளில் நடத்தி வருகிறது.
இந்தப் பகுதிகளில் ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களிடம் இரவிலும் பார்க்கக்கூடிய சானம் பொருத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பான எம்4 கார்பைன் ரைஃபில் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT