Published : 06 May 2018 07:28 PM
Last Updated : 06 May 2018 07:28 PM
நாட்டின் மிகபெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் நிறுவன அதிபர் மகனை திருமணம் செய்யவுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும், மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது திருமண திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வருகிறார்.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார்.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தனது தந்தையின் நிறுவனத்தை கவனித்து வருவதைத் தவிர, புதிதாக இரண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பிரமோல் ரியாலிட்டி நிறுவனம் தற்போது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT