Published : 24 Jul 2024 05:11 AM
Last Updated : 24 Jul 2024 05:11 AM
புதுடெல்லி: மத்திய அரசின் கூட்டாளிகளான சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை மட்டும் திருப்திபடுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட்டாக இது உள்ளது. கூட்டணி கட்சிகள்ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமாகவே பட்ஜெட் உள்ளது.சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் இல்லாத வகையில் ஏஏ-வுக்கு (அம்பானி, அதானி) பலன்தரும் விதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைமற்றும் முந்தைய பட்ஜெட்டுகளைநகல் எடுத்து சேர்த்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது பதிவில்,“இது ஆந்திரா-பிஹார் பட்ஜெட்!அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகஇந்த பட்ஜெட் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தனது பதிவில், “வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற அவசரப் பிரச்சினைகளை சமாளிப்பதற்குப் பதிலாக, பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்கவும், அரசாங்கம் கவிழ்வதற்கு முன் போதிய காலத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்தபட்ஜெட்டை பாஜக உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தனது பதிவில், “வால் நாயை ஆட்டுகிறது என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு, அதுதான் இந்த பட்ஜெட்டின் அரசியல் செய்தி” என்று கூறியுள்ளார்.
சிவசேனா (யுபிடி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “இந்த பட்ஜெட்டை ‘பிரதமர் அரசைகாப்பாற்றிக்கொள்ளும் திட்டம்’என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அரசை காப்பாற்ற வேண்டுமானால் தங்கள் கூட்டாளிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். பிஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுத்தபிறகு, அவர்களுக்கு நிதி வழங்கியுள்ளனர். மகாராஷ்டிராவை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT