Last Updated : 03 May, 2018 08:47 PM

 

Published : 03 May 2018 08:47 PM
Last Updated : 03 May 2018 08:47 PM

ஊழலில் காங்கிரஸ் தங்கப்பதக்கம்: கிண்டலின் உச்சத்தில் பிரதமர் மோடி

ஊழலில் காங்கிரஸ் கட்சி தங்கப்பதக்கம் வென்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாகச் சாடினார்.

கென்கேரியில் பிரதமர் மோடி தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, “காங்கிரஸ் ஊழலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றவில்லையெனில் தொடர்ந்து உங்களுக்குப் பிரச்சினைகளைத்தான் கொடுப்பார்கள்.

பெங்களூருவில் ‘ஸ்டீல் பிரிட்ஜ்’ (Steel bridge) என்ற கருத்தாக்கம் உண்டு, ஆனால் காங்கிரஸ் கட்சி அதனை Steal bridக்e என்று ஆக்கிவிட்டது. ஊழலை ஒழிக்க அந்த அரசு இங்கு ஒன்றுமே செய்யவில்லை.

பெங்களூரு அணி ஏரிகளுக்குப் பெயர்பெற்றது, ஆனால் தற்போது எரியும் ஏரிகள் ஆகிவிட்டன. பெல்லந்தூர் ஏரியின் நுரைநச்சுக்கள் அரசின் திறனின்மையைப் பேசுகிறது.

ஒரு காலத்தில் பூங்கா நகராக இருந்த பெங்களூரு இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. நகரத்தின் தேவைகளை இந்த அரசு கண்டுகொள்வதேயில்லை. மாநில இளைஞர்கள் இதனை ஸ்டார்ட்-அப் கேப்பிடலாக மாற்றினர், ஆனால் காங்கிரஸ் கட்சி ஓட்டைப் பானை கேப்பிடலாக மாற்றியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் இந்த மாநிலத்தில் குறைவில்லை. கணினித் தலைநகரை குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.

மத்திய அரசு அளிக்கும் நிதியினை சித்தராமையா அரசு பயன்படுத்துவதில்லை, நகரை சுத்தமாக வைப்பதில்லை. காங்கிரஸ் கோட்டை சரியும், தொங்கு சட்டசபை என்ற புரளியை அவர்களே கிளப்பி வருகின்றனர். இது பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள்.

பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்றார் மோடி.

224 சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 15ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x