Published : 23 Jul 2024 12:05 PM
Last Updated : 23 Jul 2024 12:05 PM

மோடி 3.0 அரசில் 9 முன்னுரிமைகள்: மத்திய பட்ஜெட் 2024-ல் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நரேந்திர மோடியின் 3.0 அரசு, 9 விஷயங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்திருக்கிறது என்று தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும். இது நான் சமர்ப்பிக்கும் ஏழாவது பட்ஜெட். நரேந்திர மோடியின் 3.0 அரசு, பின்பற்ற வேண்டிய 9 முன்னுரிமைகளை வகுத்துள்ளது. அவை:

  • விவசாயத்தில் உற்பத்தித் திறன் பெருக்கம்
  • வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
  • மனித வள மேம்பாடு
  • சமூக நீதி
  • உற்பத்தி மற்றும் சேவைகள்
  • நகர்ப்புற மேம்பாடு
  • எரிசக்தி பாதுகாப்பு
  • உள்கட்டமைப்பு
  • கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

இவையே மோடி அரசு வகுத்துள்ள முன்னுரிமைகள். அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு இந்த 9 முன்னுரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த 9 அம்சங்களிலும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை பட்ஜெட் எதிர்நோக்குகிறது. எதிர்கால பட்ஜெட்டுகள், இந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும்.

மத்திய அரசு வகுத்துள்ள 9 முன்னுரிமைகளில் இந்த பட்ஜெட் 4 அம்சங்களில் கவனம் செலுத்தும். வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEகள்) மற்றும் நடுத்தர வர்க்கம் ஆகிய நான்கு முதன்மைப் பகுதிகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும். ரூ.2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்கள் ஐந்து ஆண்டுகளில் பயன்பெறும் வகையில் திட்டங்களில் அரசு கவனம் செலுத்தும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். | வாசிக்க > மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x