Published : 23 Jul 2024 05:25 AM
Last Updated : 23 Jul 2024 05:25 AM
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்துவருகிறது.
இதனால் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரத்து 770 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் 124.80 அடி உயரம்உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.15 அடியைஎட்டியது. அணை முழுவதுமாகநிரம்பியுள்ளதால், அணையில் இருந்து 55 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை7 மணிக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து855 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 19.52 டிஎம்சி கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 19.48 டிஎம்சியை எட்டியது. இதனால் வினாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இரு அணைகளில் இருந் தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 75 ஆயிரத்து 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT