Published : 22 Jul 2024 06:18 AM
Last Updated : 22 Jul 2024 06:18 AM

தோல்விக்குப் பிறகும் ஏன் இவ்வளவு அகங்காரம்? - ராகுல் காந்தியை விமர்சித்த அமித் ஷா

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றுஉள்ள இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்ற நிலையில்,ராகுல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனத்தை ராகுல் முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில்,ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பொதுவாக தேர்தலில் வென்றகட்சிகள் அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன்.இப்போதுதான் முதன்முறையாகதேர்தலில் தோற்ற கட்சியின் தலைவர் (ராகுல் காந்தி) அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்க்கிறேன். இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரோ தங்களது தோல்வியை உணராமல் இன்னும் அகங்காரத்துடன் பேசுகிறார்.

நாட்டிலேயே ஊழல் மிகுந்ததாக ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு உள்ளது. நில அபகரிப்பு, மதுபானம், சுரங்கம் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளது அவரது கட்சி. ஊழல் அரசை அகற்றி ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x