Published : 16 Jul 2024 05:47 AM
Last Updated : 16 Jul 2024 05:47 AM

நேபாள புதிய பிரதமர் சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

கோப்புப்படம்

புதுடெல்லி: நேபாள நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த 2022-ம்ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தஹால் என்றபிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

பிரசண்டா ஆட்சி கவிழ்ந்தது: இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசண்டா, கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் அவரது அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை, அதிபர் ராம் சந்திர பவுடல் நேற்று முன்தினம் நியமித் தார். புதிய அரசுக்கு நேபாளி காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து உள்ளது.

புதிய பிரதமர் சர்மா ஒலிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேபாள புதிய பிரதமரான கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: நேபாள புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு எனது வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் ஆழமான பிணைப்பு களை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்து ழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x