Published : 11 Jul 2024 05:29 AM
Last Updated : 11 Jul 2024 05:29 AM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் அனுசுயா (35).இவர் தனது பாலினத்தை ஆணாகஅண்மையில் மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து, தான் பணியாற்றும் அலுவலகத்தில் இதுவரை அனுசுயா என்ற பெயரில் பெண் அதிகாரியாக இருந்துவந்த தான் இனி அனுகதிர் சூரியா என்கிற ஆண் அதிகாரியாக செயல்பட அனைத்து ஆவணங்களிலும் தனதுபாலினத்தையும் பெயரையும் மாற்றிட ஒப்புதல் கோரி நிதியமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கைக்கு நிதியமைச் சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் உள்ள எம்ஐடிஎனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் அனுகதிர் சூரியா. குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2013ஆம் ஆண்டில் சென்னையின் உதவி ஆணையராக பணியை தொடங்கினார். பிறகு 2018இல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
தற்போது ஹைதராபாத் நகரில் இணை ஆணையர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனது பாலின அடையாளத்தை அவர் மாற்றிக்கொள்ளத் துணை புரிந்தது கடந்த 2014-ம் ஆண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA – நல்சா) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும். நல்சா வழக்கில் மூன்றாம் பாலினத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. பாலின அடையாளம் என்பது தனி நபரின் விருப்பம் என்றது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும், கண்ணியமாக வாழும்சூழலுக்கான உத்தரவாதம் அவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்என உத்தரவிட்டது. இந்த பின்னணியில் பாலின மாற்றத்தை நிதிஅமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்பணி சேவை வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT