Published : 10 Jul 2024 05:42 AM
Last Updated : 10 Jul 2024 05:42 AM

அசாம் வெள்ள பாதிப்பு: காசிரங்கா பூங்காவில் 137 விலங்குகள் உயிரிழப்பு

நாகோன்: அசாம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் சிக்கி காசிரங்கா பூங்காவைச் சேர்ந்த 6 காண்டாமிருகங்கள் உட்பட 137 வனவிலங்குகள் உயிரிழந்தன.

இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குநர் சோனாலி கோஷ் கூறியுள்ளதாவது:

வெள்ள நீரில் மூழ்கி 108 மான்கள், 6 காண்டாமிருகம், ஒரு நீர்நாய் உள்ளிட்ட 137 வனவிலங்குகள் உயிரிழந்தன. அதேநேரம், 2 காண்டாமிருகம், 2 யானை, 89 மான்கள் உள் ளிட்ட 99 விலங்குகளை வெள்ளபாதிப்பிலிருந்து மீட்டுள்ளோம். பூங்காவில் உள்ள 233 முகாம்களில் 70 வன முகாம்கள் இன்னும் நீரில்தான் மூழ்கியுள்ளன.

இவ்வாறு சோனாலி கோஷ் கூறினார்.

85 பேர் உயிரிழப்பு: அசாமில் நேற்று முன்தினம் மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்ட தையடுத்து வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. 27 மாவட்டங்களில் சுமார் 19 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மழை குறைந்துவெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இது, பொதுமக்களிடத்தில் நிம்மதி பெருமூச்சை வரவழைத்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, துப்ரி மாவட்டத்தின் பிலாசிபாரா மற்றும் அகமோனி வட்டங்களில் தலாஒருவர் உயிரிழந்தனர். அதேபோன்று, கோல்பராவின் பலிஜானா, கோலாகட்டின் போககாட், சிவசாகரின் டெமோவ், கோலாகட்டின் தேகியாஜூலியில் வெள்ளத்தில் மூழ்கி தலா ஒருவர்உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட் டுள்ளது. நிவாரண நடவடிக்கை களில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x