Published : 06 Jul 2024 06:12 AM
Last Updated : 06 Jul 2024 06:12 AM
அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திரா பொருளாதார ரீதியாகமிகவும் பின்தங்கி விட்டது. கடன் சுமையும் அதிகமாகி விட்டதால் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டு உள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் முகாமிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, மாநிலபிரிவினை மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை வழங்கி உதவிட வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். அவர் நேற்றுகாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார்.
இருவரும் சுமார் ஒரு மணிநேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஆந்திராவின் நிதி நிலைமை மற்றும் எதற்காக ஆந்திராவுக்கு பொருளாதார ரீதியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கையை மத்திய நிதி அமைச்சரிடம் ஆந்திர முதல்வர் அளித்தார்.
ஆந்திர தலைநகரம் அமராவதி, போலவரம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு நிதிஒதுக்க வேண்டும். கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின்ஆட்சியின்போது ஆந்திராவின் கடன்சுமை அதிகரித்து உள்ளது. எனவே,மாநில பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டபடி நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்று மத்தியநிதியமைச்சரிடம் சந்திரபாபு நாயுடுகேட்டுக்கொண்டார். தேவையான உதவிகளை வழங்க மத்திய நிதிஅமைச்சர் உறுதி அளித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்பிறகு முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா ஆகியோரையும் சந்தித்தார். ஜப்பான் நாட்டு தூதரையும் அவர் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் நேற்று மாலை டெல்லியில் இருந்துஹைதராபாத் திரும்பினர். ஹைதராபாத்தில் இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். அப்போது இரு மாநில பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT