Published : 04 Jul 2024 05:01 AM
Last Updated : 04 Jul 2024 05:01 AM

பெண்களின் ஆரோக்கியம் குறித்து மாநிலங்களவையில் சுதா மூர்த்தி முதல் உரை: பிரதமர் மோடி பாராட்டு

சுதா மூர்த்தி

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாகநியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ்நிறுவனர் நாராயண மூர்த்தியின்மனைவி சுதா மூர்த்தி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றுமுன்தினம் 13 நிமிடம் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தாய் ஒருவர் இறந்துவிட்டால் அது மருத்துவமனையைப் பொருத்தவரை மரணக் கணக்கு. ஆனால்,அவரது குடும்பத்தைப் பொருத்தவரை அது ஈடுசெய்ய முடியாதஇழப்பு. இதனை கருத்தில் கொண்டு, 9 வயது முதல் 14 வயதுவரையிலான பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்களின் நலனுக்காக அந்த தடுப்பூசி திட்டத்தைநாம் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் வருமுன் காப்பதே சிறந்தது.

இந்த தடுப்பூசிக்கான விலை ரூ.1,400-ஆக இருந்த போதிலும், அரசு தலையிட்டால் அதை ரூ.700-800-க்கு நாம் வாங்க முடியும். இதுநமது பெண்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுதா மூர்த்திமாநிலங்களவையில் ஆற்றியமுதல் உரையை பிரதமர் மோடிநேற்று வெகுவாக பாராட்டினார்.அப்போது அவர் கூறுகையில்,“பெண்களின் ஆரோக்கியம் குறித்து பேசியதற்காக சுதா மூர்த்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தந்து செயல்பட்டு வந்துள்ளது. நாங்கள் உருவாக்கிய கழிவறை வசதியால்லட்சக்கணக்கான பெண்கள் பலன்அடைந்துள்ளனர். சானிட்டரி நாப்கின்களை வழங்கியதுடன், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வரு கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x