Published : 03 Jul 2024 06:08 AM
Last Updated : 03 Jul 2024 06:08 AM
ஹாத்ரஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஹாத்ரஸ்பகுதியில் நடந்த மத சொற்பொழிவு கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரை வில் குணமடையவும் பிரார்த்திக் கிறேன்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஹாத்ரஸில் ஆன்மிக சொற்பொழிவின் போதுகூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் முதல்வர் யோகி ஆதித்ய நாத்அறிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்உத்தரவிட்டார். சம்பவ இடத்துக்குகூடுதல் போலீஸார், மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT