Published : 02 Jul 2024 05:45 AM
Last Updated : 02 Jul 2024 05:45 AM

முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமை செயலாளராக பெண் நியமனம்

சுஜாதா சவுனிக்

மும்பை: மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, முதல் பெண் தலைமைச்செயலாளராக சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மந்த்ராலயாவில் (தலைமைச் செயலகம்) நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதின் கரீர் தனது பொறுப்பைசுஜாதாவிடம் ஒப்படைத்தார்.1987-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

சுஜாதா சவுனிக் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு மாநில உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இவரது கணவர் மனோஜ் சவுனிக்கும் மாநில தலைமைச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.

சுகாதாரம், நிதி, கல்வி, பேரிடர் மேலாண்மை மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட துறைகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறுபொறுப்புகளை சுஜாதா வகித்துள்ளார். மொத்தம் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x