Published : 28 Jun 2024 04:17 PM
Last Updated : 28 Jun 2024 04:17 PM
சென்னை: இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக அயல் நாடுகளில் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த தளத்துக்கான அக்சஸ் தங்கள் வசம் இருப்பதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அரசு தளம் என தகவல். இதனை அவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது கசிந்துள்ள தரவுகள் இது eMigrate போர்ட்டல் தொடர்புடைய விவரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்தி தொழிலாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் நபர்களின் பாஸ்போர்ட் விவரங்கள் உள்ளன என டெக் கிரன்ச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தரவுகள் அசலானவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போர்ட்டல் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் பணி செய்வதற்கான அனுமதி, கண்காணிப்பு மற்றும் காப்பீடு சார்ந்த சேவைகளை வழங்குகிறது. இந்த போர்ட்டலில் பதிவு செய்த சுமார் 2 லட்சம் பயனர்களின் தரவுகள் ஹேக்கர்கள் வசம் சிக்கி இருப்பதாக தெரிகிறது. மேலும், இத்தரவுகள் இந்த போர்ட்டலில் இருந்து நேரடியாகப் பெறப்பட்டதா என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவின் கணினி அவசர நிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) சம்பந்தப்பட்ட விவகாரத்தை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவின் அரசு தளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் அரசு தளத்தில் மோசடியாளர்கள் சூதாட்டம் சார்ந்த விளம்பரங்களை பகிர்ந்து இருந்தனர். தனிநபர்களின் தரவுகள் விவரம் கசிவு சார்ந்த விவகாரத்தில் அதன் தாக்கத்தை அளவிடுவது கடினம். ஆனாலும், தனிப்பட்ட நபர்களின் தரவுகள் கசிவது இணையவழி மோசடிக்கு வழிவகை செய்யும் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT