Published : 27 Jun 2024 05:29 AM
Last Updated : 27 Jun 2024 05:29 AM

பகலில் கடிக்கும் கொசுக்களால் புனே மருத்துவர், மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று

மும்பை: மகாராஷ்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும்அவரது மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜிகா வைரஸ் நோய் என்பது ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். மனிதர்களை பகலில் கடிக்கும் இந்த வகை கொசு டெங்கு, சிக்குன்குனியா, போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிகாவைரஸ் முதன்முதலில் உகாண்டாவில் கடந்த 1947-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும் அவரதுடீன் ஏஜ் மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து புனே மாநகராட்சிசுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருத்துவருக்கு சமீபத்தில் காய்ச்சல், தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரியை ஆய்வுக்காக தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு மருத்துவமனை அனுப்பியது. இதில் அந்த மருத்துவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மருத்துவரின் 15 வயது மகளுக்கும் ஜிகாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மாநகராட்சி ஆய்வு: புனே நகரில் 2 பேருக்கு ஜிகாவைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு பணி தொடங்கியது. இதில் மருத்துவர் வசித்த பகுதியில் வேறு எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை. என்றாலும் கொசுக்கள் பெருகுவதை தடுக்க பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுஉள்ளனர்.

விழிப்புணர்வு: மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது “இந்த வைரஸ் பாதிப்புகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பிட்ட பகுதி கர்ப்பிணி பெண்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

ஜிகா வைரஸ் பொதுவாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இத்தொற்று ஏற்பட்டால், வயிற்றில் உள்ள சிசுவை பாதிக் கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x